புதுச்சேரியில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் விரைவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. இதனால் ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக கல்வி நிலையங்கள் அனைத்தும் கடந்த கல்வியாண்டில் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டது. நேரடி வகுப்புகள் நடக்காத நிலையில், மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்பட்டனர். மேலும், கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக தொடர்ந்து பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், 2021- 2022 ம் ஆண்டிற்கான புதிய கல்வி ஆண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுவை ஆசிரியர்களுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, பாதிப்புகள் குறைந்துள்ளதால் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும்.
இதனால் ஆசிரியர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பள்ளிகள் திறக்கப்படும் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். மேலும், மாணவர்களின் நலன் கருதி வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.