புத்தாக்கப் பயிற்சி கட்டகம் தயாரிப்பு: பணியில் ஆசிரியர்கள் தீவிரம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 02, 2021

Comments:0

புத்தாக்கப் பயிற்சி கட்டகம் தயாரிப்பு: பணியில் ஆசிரியர்கள் தீவிரம்

திருப்பூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு, புத்தாக்கப்பயிற்சி கட்டகம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக, பல்வேறு கல்விசார் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், கல்வி தொலைக்காட்சி, சமுதாய ரேடியோ ஆகியவற்றில் மாணவர்களுக்கான பாடங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.தவிர, முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி கட்டகமும், பாடநுாலாக தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி, உடுமலை அடுத்த திருமூர்த்திநகர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக புத்தாக்கப் பயிற்சி கட்டகம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அவ்வகையில், முதல்வர் சங்கர் தலைமையில் விரிவுரையாளர் பாபிஇந்திரா மேற்பார்வையில், பிளஸ் 1 பாடப்புத்தகத்தில், பிளஸ் 2 வகுப்புக்கு அடிப்படையாக அமைந்திருக்கும் பாடக்கருத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. பயிற்சி நிறுவனத்தினர் கூறியதாவது:நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2 சத்துணவியல் பயிலும் மாணவர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி கட்டகம், 30 நாட்களுக்கென, புத்தக வடிவில் தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளுக்கு உரிய பயிற்சிக்கட்டகத்தில், பாடத்தலைப்பு, கற்றல் விளைவுகள், ஆசிரியர் செயல்பாடு, மாணவர் செயல்பாடுகள் மற்றும் மதிப்பீடு அளிக்கப்பட்டிருக்கும்.

குறிப்பாக, மாணவர்கள் ஆர்வத்தையும், சிந்தனைத்திறனையும் துாண்டும் வகையில் புத்தாக்கப் பயிற்சி கட்டகம் நிறைவு செய்யப்படும். இதற்கான பணியில், ஆசிரியர்கள் வித்யாராணி, நளினி, கிருஷ்ணாதேவி, ஜெயாரீனா, நான்சி, சோபியா, நாகவடிவுஅரசி, வின்சி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews