Breaking

Friday, July 23, 2021

தமிழகத்தில் பள்ளிகள் மூடல் எதிரொலி – அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. எனவே பல்வேறு மாணவர்கள் பணிக்கு செல்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆன்லைன் கல்வியில் பாடங்கள் புரிவதில்லை என்றும் மாணவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
குழந்தை தொழிலாளர்கள்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. ஏழை மாணவர்களுக்கு இந்த ஆன்லைன் கல்வி என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாமல் இருக்கிறது. எனவே ஏழை, எளிய அரசு பள்ளி மாணவர்களின் நிலையை அறிந்து அரசு, கல்வி தொலைக்காட்சியை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு ஆசிரியர்கள் அந்தந்த பாட வேளைகளில் பாடங்களை நடத்தி வருகின்றனர். தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுப்பதால் புதிய கல்வியாண்டு தொடங்கிய போதிலும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால் தொடர்ந்து ஆன்லைன் வழி கல்வி நடைபெற்று வருகிறது. இந்த ஆன்லைன் கல்வியில் பாடங்கள் புரிவதில்லை என மாணவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் விதிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் ஏராளமான மாணவர்கள் கல்வியை நிறுத்தி விட்டு பணிக்கு செல்கின்றனர். குறிப்பாக மேல்நிலை கல்வி பயிலும் மாணவர்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் கடைகளில் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளிகள் திறக்கப்படாததே குழந்தை தொழிலாளர்கள் உருவாக காரணம் என்கின்றனர் கல்வியாளர்கள். ஆன்லைன் கல்வியை பெரும்பாலான மாணவர்கள் பொருட்படுத்துவதில்லை இந்த ஊரடங்கு காலத்தில் கல்வியை விட குடும்பத்தின் வறுமை நிலையை போக்குவது பெரும் சவாலாக உள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும், மாணவிகளும் வருமானம் ஈட்டும் நோக்கில் கல்வியை புறக்கணித்து விட்டு பணிக்கு செலகின்றனர். இந்த கொரோனா பேரிடர் குழந்தை தொழிலாளர்களை உருவாக்கியிருப்பது கலவை அளிக்கும் விதமாக உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog