வேலை வாங்கித் தருவதாகக் கூறி இணையதளம் மூலம் பணம் பறிப்பு சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 22, 2021

Comments:0

வேலை வாங்கித் தருவதாகக் கூறி இணையதளம் மூலம் பணம் பறிப்பு சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை

வேலை வாங்கித் தருவதாகக் கூறி இணையதளம் மூலம் பணம் பறிப்பு சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை
கோவை, ஜூலை 21: வேலை வாங்கித் தருவதாகக் கூறி இணையதளம் மூலம் பணம் பறிக்கும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வெளியிட்ட செய்தி:

கோவை மாவட்டம், துடியலூர் காவல் நிலையப் பகுதியில் வசிக்கும் முத்துகுமார் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக தனியார் நிறுவ னத்துக்கு சொந்தமான வலைதளத்தில் விவரங்களைத் தேடியுள்ளார். அப்போது தினேஷ் என்பவரது தொலைபேசி எண் கிடைக்கப் பெற்று அவருடன் பேசியுள்ளார்.

அப்போது பதிவுக் கட்டணம் ரூ.5 ஆயிரம் மற்றும் விசா, கூரியருக் கான கட்டணம் ரூ. 27 ஆயிரத்து 633 செலுத்த வேண்டும் என்று கூறி யுள்ளார். இதைத் தொடர்ந்து தினேஷ் கூறிய செல்லிடப்பேசி எண் ணுக்கு ரூ.32 ஆயிரத்து 633யை முத்துகுமார் அனுப்பியுள்ளார். அதன்பின் முத்துகுமார் தொலைபேசி மூலம் தினேஷை தொடர்பு கொண்டபோது அவரது செல்லிடப்பேசி அணைத்து வைக்கப்பட் டிருந்தது. முத்துக்குமார் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் ஆய்வாளர் ஜெயதேவி, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சேலம் மாவட் டம், கன்னங்குறிச்சியைச் சேர்ந்த தினேஷை கைது செய்து சிறையில் அடைத்தார்.

எனவே வேலை தேடுவதற்கு அதற்கென குறிப்பிட்டுள்ள தொலை பேசி, இணையதளங்கள் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண் டும். அதேபோன்று சைபர் கிரைம் புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம் என தெ ரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews