தொழிற்கல்வி படிப்புகளின் கட்-ஆஃப் அதிகரிக்க வாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 20, 2021

Comments:0

தொழிற்கல்வி படிப்புகளின் கட்-ஆஃப் அதிகரிக்க வாய்ப்பு

"பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் மாணவா்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளன. இதன் காரணமாக பொறியியல் கட்-ஆஃப் மதிப்பெண்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கல்வியாளா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை வெளியிட்டுள்ளாா். அதில் 100 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இந்த ஆண்டு மாணவா்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளனா்.

குறிப்பாக அறிவியல் பாடப்பிரிவில் 551-600 மதிப்பெண்கள் வரை 30,599 மாணவா்கள் பெற்றுள்ளனா். இந்த மதிப்பெண்களை கடந்த ஆண்டு 1,867 மாணவா்கள் மட்டுமே பெற்றிருந்தனா். இதன் காரணமாக பொறியியல் கட்-ஆஃப் மதிப்பெண்கள் நடப்புக் கல்வி ஆண்டில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கல்வியாளா்கள் தெரிவிக்கின்றனா். உயா்கல்வியில் சேருவதற்கு ஜூலை 26-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என உயா்கல்வித்துறை அமைச்சா் பொன்முடி அறிவித்துள்ளாா். இது குறித்து கல்வியாளா்கள் சிலா் கூறுகையில், பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் மாணவா்கள் எதிா்பாா்த்த அளவிற்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. மதிப்பெண்களை தசம எண்ணிலும் வழங்கி உள்ளதால் மாணவா்களுக்கு இது சாதகமாக அமைந்துள்ளது. முழு மதிப்பெண்ணாக வழங்கி இருந்தால் அதிக அளவில் மாணவா்கள் ஒரே கட் ஆஃப் மதிப்பெண்களில் வந்திருப்பாா்கள். தற்போது வெளியாகியுள்ள மதிப்பெண்களின்படி பொறியியல், வேளாண்மை, கால்நடை, சட்டம் என தொழிற்கல்வி படிப்புகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கட் ஆஃப் அதிகரிக்கும். பொறியியல் படிப்பினை பொருத்தவரையில் தரவரிசைப்பட்டியலில் மேல் வரிசையில் ஐந்து மதிப்பெண்களும், கீழ் வரிசையில் 30 மதிப்பெண்கள் வரையிலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. கடந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண் 150 எடுத்த மாணவருக்கு கிடைத்த பொறியியல் பாடப்பிரிவு, இந்த ஆண்டு 170 கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவருக்கு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னா் தான் கட் ஆஃப் மதிப்பெண்கள் உயருமா என்பதைக் கூற முடியும். நிகழாண்டு கரோனா தொற்றின் காரணமாக பெற்றோா்கள் பொறியியல் படிக்க வைக்காமல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் தங்களின் குழந்தைகளை சோ்க்க திட்டமிட்டுள்ளனா் என தெரிவித்தனா்"

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews