அகில இந்திய மருத்துவ படிப்பில் ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு நடப்பு ஆண்டிலேயே இடஒதுக்கீடு வழங்கப்படும்: மத்திய அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 29, 2021

Comments:0

அகில இந்திய மருத்துவ படிப்பில் ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு நடப்பு ஆண்டிலேயே இடஒதுக்கீடு வழங்கப்படும்: மத்திய அரசு

மாநில அரசுகள் நடத்தி வரும் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய பிரிவில் ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு மற்றும் 10% பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு ஆகியவற்றை அளிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது எப்போது இந்த இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படும் என்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக தான் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திங்களன்று பிரதமர் மோடி தலைமையில் இதுதொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. அந்த ஆலோசனையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து இந்த முடிவு தற்போது அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட 1500 ஓ.பி.சி பிரிவை சேர்ந்த இளங்கலை மாணவர்கள், 2500 ஓ.பி.சி பிரிவை சேர்ந்த முதுகலை மாணவர்கள் என மொத்தம் 4000 ஓ.பி.சி பிரிவு மாணவர்கள் பயனடைவார்கள். அதேபோல 550 பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள், மற்றும் மேற்படிப்பில் 1000 பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும் பலன் கிடைக்கும். எம்.பி.பி.எஸ், எம்.டி, எம்.எஸ்., டிப்ளமோ, பிடிஎஸ், எம்டிஎஸ் படிப்புகளில் நடப்பு கல்வியாண்டு முதல் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews