திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாற்று துறையின் தற்காலிக உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நாளை (30.07.2021) நேர்காணல் நடைபெறவுள்ளது என பதிவாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு நேர்காணல்:
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் கலை, மொழி, அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய 24 துறைகள் உள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. முதுநிலை, எம்.பில் மற்றும் பி எச்.டி போன்ற படிப்புகளும் இந்த பல்கலைக்கழகத்தில் உள்ளது.
தமிழகத்தில் இந்த பல்கலைக்கழகத்தில் தான் முதன்முதலாக இணையம் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த வருடம் இப்பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. அதே போல் இந்த ஆண்டு தேர்வுகள் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த பல்கலைக்கழகத்தில் வரலாற்று துறை சார்ந்த காலிப்பணியிடங்களுக்கு தற்காலிக பேராசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான நேர்காணல் நாளை (30.07.2021) நடைபெறவுள்ளது என பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் தகுதியுடையோர் சுய விவர குறிப்புடன் அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் கையொப்பமிட்ட நகல்களுடன் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நேர்காணல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.