மாணவர்களுக்கு சூடான ஊட்டச் சத்துணவு மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
சென்னை:பள்ளி மாணவர்களுக்கு, சூடான ஊட்டச் சத்துணவு வழங்க கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசின் நிலையை தெரிவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணை
உயர் நீதிமன்றத்தில், 'சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்டு சிவிக் ஆக் ஷன் குரூப்' சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதனால், பள்ளிகளில் மதிய உணவு கிடையாது. சத்தான உணவின்றி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மாணவர்களுக்கு, அம்மா உணவகம், சமூக கூடங்கள் வாயிலாக, தினசரி சூடான ஊட்டச் சத்துணவு கிடைக்கும் வகையில் திட்டம் வகுக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அட்வ கேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தார். பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும், மாணவர்களுக்கு அரிசி, பருப்பு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்றும், மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட சூடான ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட வேண்டும் என்றும், மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா கோரினார்.இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:ஊரடங்கு காலத்தில், மாணவர்களுக்கு உணவு வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மாநில அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கில் முக்கியத்துவம் உள்ளதால், மத்திய அரசின் நிலையை தெரிவிக்க வேண்டும்.
தள்ளிவைப்பு
சத்தான உணவு வழங்கப்பட வேண்டும் என்பது தான் சட்டத்தின் நோக்கம் என்பதை, மனுதாரர் வழக்கறிஞர் சுட்டிக் காட்டினார். மேலும், சூடான ஊட்டச் சத்துணவை, மாநில அரசு வழங்க வேண்டும் எனவும் கோரினார்.எனவே, மத்திய, மாநில அரசுகள், தங்களின் நிலைப்பாட்டை விரைவில் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. விசாரணை, அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.