அம்பத்தூர் அரசு ஐடிஐ-யில்சேர பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அம்பத்தூர் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) கம்மியர் கருவிகள், கோபா, செயலகப் பயிற்சி, கட்டிடப் பட வரைவாளர் தையல்தொழில்நுட்பம் ஆகிய தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு சேர்க்கைக்கு ஆன்லைனில் (www.skilltraining.tn.gov.in) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தையல் தொழில்நுட்பப் பயிற்சியில் சேர 8-ம் வகுப்பு தேர்ச்சியும், இதர பயிற்சிகளில் சேர 10-ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது. சேர்க்கை ஜூலை 1 முதல் நடைபெற்று வருகிறது. பயிற்சியில் சேருவோருக்கு மாதம்தோறும் ரூ.750 உதவித்தொகை வழங்கப்படும். அதோடு இலவச பஸ் பாஸ், சைக்கிள், லேப்டாப், பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், இரு செட் சீருடை, ஷூ ஆகியவையும் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.