Breaking

Friday, July 02, 2021

அனைத்து மாவட்டங்களிலும் பொதுபோக்குவரத்துக்கு அனுமதி!

அனைத்து மாவட்டங்களிலும் பொதுபோக்குவரத்துக்கு அனுமதி!

தமிழகத்தில் இபாஸ் மற்றும் இ பதிவு நடைமுறை முற்றிலும் ரத்து.

டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி.

அனைத்து துணிக்கடை, நகைக்கடைகள் 50 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி. உணவகங்களில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ண அனுமதி.

பொழுது போக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட அனுமதி.

அனைத்து வகை கடைகளும் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி.

கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு உள்பட மலைப்பகுதிகளுக்கு செல்ல திங்கள் முதல் இபாஸ் தேவையில்லை.

நீச்சல் குளங்கள், மதுபான பார்கள், உயிரியல் பூங்காக்களுக்கு தடை தொடரும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog