தமிழகத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் தமிழக அரசின் இலவச இணைய வழி வகுப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்து உள்ளது.
TNPSC ஆன்லைன் வகுப்புகள்:
தமிழகத்தில் அரசு பணிகளில் சேருவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் தேர்வுகளை நடத்துகிறது. ஒவ்வொரு வகை பதவிகளுக்கும் ஏற்ப வினாக்கள் வடிவமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கு பெற்று சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பிறகு இவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படுகிறது. இந்த போட்டித் தேர்வுகளில் பங்கேற்க மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்கின்றனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் TNPSC கோச்சிங் சென்டர்கள் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதை தனியார் மையங்கள் நடத்துகின்றன. இந்த பயிற்சி மையங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவி வருவதால் இந்த பயிற்சி மையங்களும் மூடப்பட்டுள்ளது. அந்தந்த பயிற்சி மையங்கள் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி தேர்விற்கு வழிகாட்டுகிறது. அதே போல் அரசும் தமிழ்நாடு பணிகள் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு இணையம் மூலம் பயிற்சி வகுப்புகளை தொடங்கியுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் எனவும், பாட குறிப்புகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் Group 2 தேர்வுக்கு திங்கட்கிழமை (5.7.2021) முதல் கட்டணமில்லா இணையவழி பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. Platform – Cisco Webex இணையவழி பயிற்சியில் Cisco app மூலமாகவும் அல்லது Browser மூலமாகவும் நேரடியாகவும் இணையலாம். குரூப் 2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் காலை 10 மணி முதல் 12 வரையும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.