மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு பொது நுழைவுத் தேர்வு இல்லை. வழக்கமான முறையில் சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது.
மருத்துவக் கல்வி போலவே பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட உயர்கல்வி பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று தேசியகல்விக் கொள்கை - 2020 வலியுறுத்துகிறது.
அதன்படி, முதல்கட்டமாக நாடுமுழுவதும் உள்ள 41 மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு 2021-22 ஆண்டு முதல் பொதுநுழைவுத் தேர்வு (சியூசிஇடி) நடத்தப்படும் என மத்திய கல்விஅமைச்சகம் ஏற்கெனவே அறிவித்தது. உயர் தொழில்நுட்ப திறனறித்தேர்வான இது, ஜூன் மாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. கரோனா பாதிப்பு
இந்நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக யுஜிசி வெளியிட்ட அறிவிப்பில், “நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கரோனா பாதிப்பு காரணமாக மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வை தற்போது நடத்த முடியவில்லை. எனவே, பல்கலைக்கழகங்களில் வழக்கமான முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம். 2022-23 கல்வி ஆண்டில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படலாம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.