கடந்த ஆண்டு'கட் ஆப்' மதிப்பெண் பட்டியல் இணையத்தில் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 28, 2021

Comments:0

கடந்த ஆண்டு'கட் ஆப்' மதிப்பெண் பட்டியல் இணையத்தில் வெளியீடு

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் கல்லுாரிகளை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகளை அறிய, முந்தைய ஆண்டின், 'கட் ஆப்' மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கு 26ம் தேதி முதல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவுகள் துவங்கியுள்ளன. ஆக., 24 வரை விண்ணப்பம் பதிவு செய்யலாம்.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், இரண்டு லட்சம் இடங்களுக்கு ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. விண்ணப்பிக்கும் மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் எடுத்துள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது.அதில், இன வாரியாக இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும். இந்த தரவரிசை பட்டியலில் குறிப்பிடப்படும் கட் ஆப் மதிப்பெண்களுக்கு ஏற்ப, கல்லுாரிகள் மற்றும் பாடப் பிரிவுகள் ஒதுக்கப்படும்.அந்த வகையில், மாணவர்களின் கட் ஆப் மதிப்பெண்களுக்கு ஏற்ப, எந்த கல்லுாரிகளில் இடம் கிடைக்கும் என்ற தோராயமான நிலையை தெரிந்து கொள்ளும் வகையில், கடந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் பட்டியலை, தமிழகஇன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்டு உள்ளது.

கவுன்சிலிங் கமிட்டியின், www.tneaonline.org என்ற இணையதளத்தில், கடந்த ஆண்டு கட் ஆப் மற்றும் கல்லுாரி ஒதுக்கீட்டு பட்டியலை, மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். இதன்படி, தங்களுக்கான இன்ஜினியரிங் வாய்ப்புகளை மாணவர்கள் திட்டமிட்டு கொள்ளலாம் என, கவுன்சிலிங் கமிட்டி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews