ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வில், அனைத்து ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் அ.மாயவன், மாநில நிர்வாகிகள் எஸ்.பக்தவச்சலம், எஸ்.சேதுசெல்வம், சி.ஜெயகுமார், முருகேசன், ஆர்.கே.சாமி ஆகியோர் பள்ளிக்கல்வி இணை இயக்குனருக்கு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
நடப்பு கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு நடத்த இயக்குனர் அலுவலகம் திட்டமிட்டுள்ளது. பொதுக் கலந்தாய்வின்போது பொது மாறுதலில் கலந்து கொள்வதற்கு ஓர் இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற முந்தைய அரசின் நிபந்தனையை அகற்றி, ஓராண்டு பணிபுரிந்து இருந்தாலே போதும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
உபரி பணியிடத்தால் மாறுதல் வழங்கப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள முன்னுரிமை அளிக்க வேண்டும். ராணுவத்தில் பணியாற்றுபவர்களின் கணவன், மனைவி ஆகியோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். முற்றிலும் கண் பார்வையற்றவர்களுக்கு, 3 சக்கர வண்டியை பயன்படுத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும். இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, புற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், கணவனை இழந்தவர்கள், 40 வயதை கடந்தும் திருமணம் ஆகாத முதிர் கன்னியர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோர்கள், 40 கிமீ தூரத்துக்கு மேல் பணியாற்றும் கணவன், மனைவிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
பதவி உயர்வு பெற்று சென்றவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். மாநகராட்சி பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு செல்ல மாறுதல் வழங்க வேண்டும். பொது கலந்தாய்வுக்கு முன் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் மனமொத்த மாறுதல் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.