B.E., B.Tech. ஆகிய பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், B.E., B.Tech., படிப்புகளில் சேருவதற்கு இன்று முதல் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது எனவும் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 4-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல், ஆகஸ்ட் 25-ஆம் தேதி ரேண்டம் எண் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்றும் அக்டோபர் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை துணைக் கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் கலந்தாய்வை முடித்து மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதேபோல் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்று முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குநர் பூரணசந்திரன் அறிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.