தமிழகத்தில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பாண்டு அமல்படுத்துவது குறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்க மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் காலஅவகாசம் கேட்டுள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கை:
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு சேர மத்திய அரசால் நீட் என்னும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த நீட் தேர்வை தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இது குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. தமிழக முதல்வர் டெல்லி சென்று பிரதமரிடம் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரினார். மேலும் காணொலி கலந்தாய்வின் போது தமிழகத்தில் நீட் தேர்வு நடத்துவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமரிடம் கூறினார்.
ஆனாலும் மத்திய அரசு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவில்லை. வரும் செப்டம்பர் மாதம் நீட் தேர்வை நடத்த திட்டமிட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான 69% சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என தமிழக கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் படி இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைத்து ஆய்வு செய்து 2021-22 ஆம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் மத்திய அரசு இது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் திமுகவினர் மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோர்க்கு தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பாண்டு முதல் அமல்படுத்துவது குறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்க மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.