இனி ஞாயிற்றுக் கிழமையும் மாத சம்பளம் கிடைக்கும் – ஆகஸ்ட் 1 முதல் அமல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 26, 2021

Comments:0

இனி ஞாயிற்றுக் கிழமையும் மாத சம்பளம் கிடைக்கும் – ஆகஸ்ட் 1 முதல் அமல்!

நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் இனி மாத சம்பளம் (Salary), ஓய்வூதியம் (Pension) மற்றும் இஎம்ஐ (EMI) கட்டணங்கள் போன்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இனி வார முதல்நாள் வரை காத்திருக்க தேவையில்லை. தேசிய தானியங்கி தீர்வு அமைப்பின் (NACH) விதிகளை மாற்றி வாரம் முழுவதும் வங்கி சேவை கிடைக்கும் வசதியை அறிவித்துள்ளது. இந்த சேவைகள் 2021 ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RBI அறிவிப்பு:

நாடு முழுவதும் மாத சம்பளம் பெறும் தொழிலாளர்கள் வங்கிகளில் சில பரிவர்த்தனைகள் செய்ய வார முதல் நாள் வரை காத்திருக்க வேண்டும். காரணம் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வங்கிகள் விடுமுறை. இந்நிலையில் ரிசர்வ் வங்கி, தேசிய தானியங்கி தீர்வு அமைப்பின் (NACH) விதிகளை மாற்றியுள்ளது. அதன்படி, நீங்கள் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காத்திருக்க தேவையில்லை. மாத சம்பளம் (Salary), ஓய்வூதியம் (Pension) மற்றும் இஎம்ஐ (EMI) கட்டணங்கள் போன்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு வங்கிகள் வாரத்தின் 7 நாட்களும் திறந்திருக்கும். உங்களது சம்பள நாள் வாரத்தின் இறுதி நாளில் வந்தாலும் நீங்கள் சரியான நேரத்தில் சம்பள தொகையை பெறலாம். கடந்த ஜூன் மாத கடன் கொள்கை மறுஆய்வின் போது, வாடிக்கையாளர்களின் வசதியை மேலும் மேம்படுத்துவதற்கும், 24×7 ரியல் டைம் மொத்த தீர்வின் (RDGS), நன்மைகளைப் பெறுவதற்கும், தற்போது வங்கி வேலை நாட்களில் மட்டும் இயக்கத்தில் உள்ள தேசிய தானியங்கி தீர்வு (NACH), இனி வாரம் முழுவதும் இயக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கியின் (RBI) ஆளுநர் சக்தி காந்தா தாஸ் தெரிவித்துள்ளார். என்.ஏ.சி.எச். (NACH) இந்திய கொடுப்பனவு கூட்டு அமைப்பால் (NPCI) இயக்கப்படும் கட்டண செலுத்தும் முறைமையாகும். இது ஈவுத்தொகை, வட்டி, சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்ற பல்வேறு வகையான பரிவர்த்தனைகளை செய்ய உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் மின்சார கட்டணம், கேஸ் சிலிண்டர் கட்டணம் (Gas Cylinder Bill), தொலைபேசி கட்டணம், நீர் கட்டணம், கடன் இ.எம்.ஐ, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மற்றும் காப்பீட்டு பிரீமியம் செலுத்தும் வசதியும் வழங்குகிறது. இதனை செய்யவும் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே முடியும்.

ஆனால் இனி அனைத்து வசதிகளையும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த என்.ஏ.சி.எச் பயனாளிகளுக்கான நேரடி மற்றும் பயனுள்ள டிஜிட்டல் பயன்முறையின் பிரபலமான மற்றும் முக்கிய டிஜிட்டல் முறையாக உருவாக்கி உள்ளது என RBI தெரிவித்துள்ளது. தற்போது கொரோனா பரவல் காரணமாக பலர் அவதிப்பட்டு வரும் நிலையில் இந்த வசதி மூலமாக சரியான நேரத்தில் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட அனைத்து பண பரிவர்த்தனைகளையும் செய்யலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews