தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் அவர்கள், விளக்கம் அளித்துள்ளார். மேலும், தமிழகத்தில் கொரோனா 3ம் அலை பரவல் குறித்தும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளில் நடத்தப்பட்டது. தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில், மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. மாணவர்களுக்கு மாற்று முறையில் மதிப்பெண் வழங்க அரசு முடிவு செய்தது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. 2021-2022ம் கல்வியாண்டு ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர் சேர்க்கை பணிகள், பாட புத்தகம் விநியோகம் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக ஆசிரியர்கள் முன்னதாக சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆன்லைன் வகுப்புகளை எடுப்பதற்காக அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு வர அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், பாதிப்பு குறைந்த மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பது பற்றி கேள்விகள் எழுந்து வருகிறது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் மீண்டும் மாநிலத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து உயர் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயல் ராதா கிருஷ்ணன் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பள்ளிகள் திறப்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது பற்றிய முக்கிய முடிவை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தான் எடுப்பார் என்று அறிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.