Breaking

Friday, July 09, 2021

பிளஸ் 2 முடித்தவர்களுக்கான வழிகாட்டு கருத்தரங்கம் - இணைய வழியில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது

பிளஸ் 2 முடித்தவர்களுக்கான வழிகாட்டு கருத்தரங்கம்

இணைய வழியில் நாளை நடக்கிறது

சென்னை, ஜூலை 8: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிக ளின் உயர்கல்விக்கு வழிகாட்டும் கருத்தரங்கம், இணைய வழியில் சனிக்கிழமை நடக்கிறது.

அதில், இளநிலையில் நவீன பொறியியல் கல்வி பெற்று, பட்ட மேற்படிப்புக்கும், சிறந்த வேலைகள் பெறுவதற் கும் ஆலோசனை வழங்கப்படுவதோடு, வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகள் சார்ந்த கலந்துரையாடலும் நடைபெறும். கருத்தரங்கில் அமெரிக்காவின் மிக்சிகன் - டியர்பர்ன் பல்கலைக் கழகத்தின் துறைத் தலைவர் டாக்டர்.ராஜூ பாலகிருஷ்ணன், சன்னி பல்கலைக்கழக ஆய்வு மற்றும் பட்டப்படிப்புத் துறைக்கான துணைத் தலைவர் லிசா கேல கர், அமெரிக்காவின் ராச்செஸ்டர் தொழில்நுட்ப பல்க லைக்கழகத்தின் பன்னாட்டு கல்வி துணைத் தலைவர் டாக் டர் ஜேம்ஸ் மயர்ஸ் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்துறை பேராசிரியர் வி.ராஜூ ஆகி யோர் கலந்து கொண்டு, வாய்ப்புகளை விளக்கி மாணவர்க ளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.

பங்கேற்க ஆர்வமுள்ளோர், www.edexlive.com என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog