பத்ம விருதுகள்-2022-க்கான பரிந்துரைகளை 2021 செப்டம்பர் 15ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 17, 2021

Comments:0

பத்ம விருதுகள்-2022-க்கான பரிந்துரைகளை 2021 செப்டம்பர் 15ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்

2022-ஆம் ஆண்டு குடியரசு தின நிகழ்ச்சியை முன்னிட்டு அறிவிக்கப்படவுள்ள, பத்ம விருதுகளுக்கான, விருதுகளுக்கு https://www.padmaawards.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக நியமனங்கள் / பரிந்துரைகளை அளிக்கலாம்.

இதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15.

2022ம் ஆண்டு குடியரசு தின நிகழ்ச்சியை முன்னிட்டு அறிவிக்கப்படவுள்ள, பத்ம விருதுகளுக்கான ( பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ) விருதுகளுக்கு தற்போது ஆன்லைன் மூலம் நியமனங்கள் / பரிந்துரைகளை அளிக்கலாம். பத்ம விருதுகளுக்கு பரிந்துரைப்பதற்கான கடைசி தேதி 2021, செப்டம்பர் 15. பத்ம விருதுகளுக்கான நியமனங்கள் /பரிந்துரைகள் https://padmaawards.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்த விருதுகள் 1954ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த விருது 'தனித்துவமான பணியை'யை அங்கீகரிக்க முற்படுகிறது மற்றும் கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரம், பொது சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற துறைகளில் புகழ்பெற்ற மற்றும் விதிவிலக்கான சாதனைகள் / சேவைக்காக வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்கு இனம், வேலை, பதவி அல்லது பாலினம் என எந்த பாகுபாடின்றி அனைவரும் தகுதியானவர்கள். மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தவிர அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை. பத்ம விருதுகளை மக்கள் பத்ம விருதுகளாக மாற்றுவதில் அரசு உறுதியுடன் உள்ளது. அதனால், அனைத்து குடிமக்களும், சுய நியமனம் உட்பட நியமனங்கள்/ பரிந்துரைகளை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பெண்கள், சமூகத்தில் பின்தங்கியவர்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர், மாற்றுதிறனாளி நபர்கள் மற்றும் சமூகத்திற்கு தன்னலமற்ற சேவையைச் செய்கிறவர்களிடமிருந்து அங்கீகரிக்கப்பட வேண்டிய திறமையான நபர்களை அடையாளம் காண ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.

இந்த நியமனங்கள் / பரிந்துரைகள் மேற்கூறிய பத்ம விருது இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறைப்படி, விவரிப்பு வடிவத்தில் மேற்கோள் (அதிகபட்சம் 800 வார்த்தைகள்) உட்பட தொடர்புடைய அனைத்து விவரங்களையும் கொண்டிருக்க வேண்டும். அவை பரிந்துரைக்கப்பட்ட நபர் அந்தந்த துறைகளில் செய்த தனித்துவமான மற்றும் விதிவிலக்கான சாதனைகள் / சேவையை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews