நாடு முழுவதும் வங்கி ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 10 நாட்கள் விடுப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 10, 2021

Comments:0

நாடு முழுவதும் வங்கி ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 10 நாட்கள் விடுப்பு!

நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பினை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 10 நாட்கள் அறிவிப்பு இல்லாத விடுப்பு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி அறிவிப்பு:

இந்திய அரசின் முக்கிய கருவூலமாக ரிசர்வ் வங்கி உள்ளது. இந்த வங்கி மூலமாக நாட்டில் பல பொருளாதார நடவடிக்கைகள் இயங்கி வருகின்றன. பொதுமக்கள் மற்ற வங்கிகளைப் பயன்படுத்துவது போல ரிசர்வ் வங்கியைப் பயன்படுத்த முடியாது. அதற்காக பாரத ஸ்டேட் வங்கி இதன் முகமை வங்கி ஆகும். அதன் மூலமாக மக்கள் நேரடியாக பயன்படுத்தலாம். நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இந்நிலையில் அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் முக்கிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் (Reserve Bank) 2015 சுற்றறிக்கையின்படி, கருவூல செயல்பாடுகள், நாணய செஸ்ட், ரிஸ்க் மாடலிங், மாதிரி சரிபார்ப்பு போன்ற பிரிவுகளில் பணிபுரியும் வங்கி ஊழியர்கள் பாதிக்கப்படக்கூடிய முக்கிய பணிகளை செய்பவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்களுக்கு ‘கட்டாய விடுப்பின்’ கீழ் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்களுக்கான விடுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து ஊரக வளர்ச்சி வங்கி மற்றும் கூட்டுறவு வங்கி உள்ளிட்ட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தகவலை அனுப்பியுள்ளது. இதில், RBI Modified Risk Management Guidelines-ன் கீழ் எதிர்பாராத விடுமுறைகளை வழங்கும் கொள்கையை தயாரிக்க ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் வங்கிகள் தங்களது இயக்குநர்கள் குழுவின் படி முக்கியமான பதவிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவ்வப்போது பட்டியலை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews