ஜூலை மாத வங்கி விடுமுறை நாட்கள் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 25, 2021

Comments:0

ஜூலை மாத வங்கி விடுமுறை நாட்கள் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!

இந்தியாவில் வருகிற ஜூலை மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி விடுமுறை நாட்களின் பட்டியலை இந்த பதிவில் காண்போம். வங்கி விடுமுறை:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. முன்னதாக கொரோனா பரவல் அச்சம் காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் அனைத்தும் பகுதி நேரமாக மட்டுமே செயல்பட்டு வந்தது. அதிலும் அத்தியாவசிய 4 சேவைகள் மட்டுமே வங்கிகளில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது பல மாநிலங்களில் வங்கிகள் முழு அலுவலக நேரத்தில் செயல்பட தொடங்கி விட்டது. இந்நிலையில், ஜூலை மாதத்தில் வங்கி தொடர்பான பணிகளை அனைவரும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்று வங்கி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. வழக்கத்தை விட இந்த மாதத்தில் 9 நாட்கள் கூடுதலாக விடுமுறைகள் உள்ளது தான் இதற்கு காரணம். இது தவிர சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 6 நாட்களுக்கு விடுமுறை சேர்த்து மொத்தம் 15 நாட்கள் விடுமுறை வருகிறது. ஜூலை மாத விடுமுறை நாட்கள்:
12 ஜூலை 2021 – திங்கள் – ரத யாத்திரை (ஒரிசா) 13 ஜூலை 2021 – செவ்வாய் – தியாகிகள் தினம் / பானு ஜெயந்தி (தியாகிகள் தினம்- ஜம்மு-காஷ்மீர், பானு ஜெயந்தி- சிக்கிம்)
14 ஜூலை 2021- புதன்கிழமை, ட்ருக்பா செச்சி (கேங்டாக்)
16 ஜூலை 2021 – வெள்ளி – ஹரேலா (டேராடூன்)
17 ஜூலை 2021- சனிக்கிழமை- கார்ச்சி பூஜை (மேகாலயா)
19 ஜூலை 2021- திங்கள்- குரு ரிம்போசேவின் துங்கர் செச்சு (கேங்டோக்)
20 ஜூலை 2021 – செவ்வாய் – பக்ரிட் (ஜம்மு-கொச்சி)
21 ஜூலை 2021 – புதன் – பக்ரிட் (நாட்டில்)
31 ஜூலை 2021 – சனிக்கிழமை – கெர் பூஜா (அகர்தலா)
மேலும், ஜூன் மாத இறுதியிலும் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை, ஜூன் கடைசி வார விடுமுறை:

ஜூன் 25 – குரு ஹர்கோபிந்த் ஜியின் பிறந்த நாள் (ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்பட்டன)
ஜூன் 26 – இரண்டாவது சனிக்கிழமை (வார விடுமுறை)
ஜூன் 27 – ஞாயிறு (வார விடுமுறை)
ஜூன் 30- ரம்னா நீ (ஐஸ்வாலில் விடுமுறை)

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews