Breaking

Monday, June 14, 2021

இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

பார்வையில் -1ல் காணும் அரசாணையின்படி, கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு நடத்தப்பட மாட்டாது என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பார்வை-2ல் காணும் பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளின் படி, கீழ்க்காணும் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை) பணி புரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) பின்பற்றி 14.06.2021முதல் பணிக்கு வருகை புரிய வேண்டுமென இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குதல்.

. உயர்கல்வி பயிலுவதற்கான சான்றிதழ் வழங்குதல் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளுதல்

• மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாடபுத்தகங்கள் மற்றும் கற்றல்

கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்கள் வழங்குதல்

பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் சுத்தம் செய்தல்

மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி கற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிடுதல்‌.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog