"நீட்" தேர்வு குறித்த அறிவிப்பு எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 01, 2021

1 Comments

"நீட்" தேர்வு குறித்த அறிவிப்பு எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

சட்டசபை கூடும்போது ‘நீட்’ தேர்வு குறித்த அறிவிப்பு வரும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் தலா ஒரு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி இருக்க வேண்டும் என கலெக்டரிடம் தெரிவித்திருக்கிறோம். பொதுமக்களிடையே தடுப்பூசி போடுவதில் தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு அந்தந்த பகுதியிலேயே சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. இன்றைக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை வருத்தத்துக்குரியது. கிட்டத்தட்ட 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது இதற்கெல்லாம் உடனடியாக தீர்வு காண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து முதல்-அமைச்சரிடம் எடுத்துக்கூறி எப்படி தீர்வு காணலாம்? என்று முடிவு செய்யப்படும்.
‘நீட்’ தேர்வு குறித்து தேர்தல் பிரசாரத்திலே மையக்கருத்தாக வைத்தோம். முதல்-அமைச்சரும் ‘நீட்’ தேர்வை எந்த காலத்திலும் தமிழ் நாட்டிற்குள் நுழைய விடமாட்டோம் என்று சொல்லி இருக்கிறார். தமிழக சட்டசபை கூடும்போது அது தொடர்பான அறிவிப்பு வரும்” என்று அவர் கூறினார்.

1 comment:

  1. தனியார் பள்ளி களை நிதியுதவி இல்லாமல் ஆரம்பிக்க அரசு தான் காரணம்.. சிறுபான்மை பற்கள் மெட் ரிக் பள்ளி கள் என பலவகை உண்டு. நிதியுதவி இல்லாமல் இருக்கும் பள்ளி கள் மாதம் ₹2000 முதல் 5000 வரை கற்பித்தல் கட்டணங் கள் வசூல் செய்து பல லட்சம் ரூபாய் கள்ளை அடிக்கின்றார. அவர்கள் தான் இந்த இடர் காலங்களில் ஆசிரியர் களுக் கு ஊதியம் நிலை யை உருவாக்கி ட வேண்டும்.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews