அண்ணா பல்கலை. துணைவேந்தர் பதவி: விண்ணப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம்
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என தேடுதல் குழு அறிவித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சூரப்பாவின் பதவிக் காலம், கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதியுடன் நிறைவ டைந்தது. இதையொட்டி, புதிய துணைவேந்தரைத் தேர்ந்தெடுப்பதற் காகத் தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்தார். தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெக தீஷ் குமார் தலைவராகவும், தமிழக அரசின் முன்னாள் கூடுதல் தலை மைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் ஆகியோர் தேடுதல் குழுவின் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஜூன் 30 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள் ளது. விண்ணப்பப் படிவங்களை www.annauniv.edu என்கிற இணை யதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என வும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை nodalofficer2021@annauniv.edu என்கிற என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களில் தகுதியான நபர்களைத் தேர்வு செய்து, தேடுதல் குழு நேர்முகத் தேர்வு நடத்தும். அதில் தகுதி யாக மூன்று நபர்களின் விவரங்கள் ஆளுநரின் பரிசீலனைக்குஅனுப்பி வைக்கப்படும். அதிலிருந்து ஒருவரைத் தேர்வு செய்து பல்கலைக்க ழக வேந்தரும் தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித், புதிய துணை வேந்தராக நியமிப்பார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.