திரிபுரா மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மறு அறிவிப்பு வரும் வரை தள்ளி வைக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ரத்தன் லால் நாத் அறிவித்துள்ளார்.
பொதுத்தேர்வுகள் தள்ளிவைப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் மத்திய அரசு மாநிலங்களில் உள்ள தொற்று நிலையைப் பொறுத்து கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசுகளுக்கு அனுமதியளித்துள்ளது. அதன்படி, மாநில அரசுகள் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கொரோனா தொற்று பரவல் காலங்களில் மாணவர்களுக்கு தேர்வு நடத்த பெரும்பாலான பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்து வந்தனர்.
தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்துவதற்கு கோரிக்கையும் வைக்கப்பட்டது. இந்நிலையில் தொற்றின் பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தற்போது சென்றுள்ள நிலையில் பல கல்வி வாரியங்களும் தேர்வுகளை ரத்து செய்தும், தள்ளி வைத்தும் வருகின்றது. இதே போல் திரிபுரா மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மறு அறிவிப்பு வரும் வரை தள்ளி வைக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ரத்தன் லால் நாத் அதிகாரபூர்வ தகவலை அளித்துள்ளார்.
10ம் வகுப்பு தேர்வுகள் மே 19ம் தேதியும், 12ம் வகுப்பு தேர்வுகள் மே 18ம் தேதியும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், திரிபுரா அரசு அங்கு அனைத்து தனியார் மற்றும் அரசு பல்கலை, கல்லூரி இளநிலை, முதுநிலை தேர்வுகளையும் தள்ளிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.