சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு நடத்துவது அல்லது ரத்து செய்வது குறித்து ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிபுணர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.
சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்:
நாட்டில் தற்போது ஒரு நாளில் 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு சில மாநிலங்களில் தொற்று நிலைமை கட்டுக்குள் இருந்த போதிலும், பல மாநிலங்களில் தொற்று கட்டுப்பாட்டை மீறி அதிக வேகத்தில் பரவி வருகிறது. தொற்று பாதிப்புகள் ஜூன் மாதத்தில் குறையத் தொடங்கலாம் என்று நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாட்டில் பல முக்கிய தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ கல்வி வாரியமும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்தும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தள்ளிவைத்தும் உத்தரவிட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வுகளைப் போல், 12ம் வகுப்பு தேர்வுகளையும் வாரியம் ரத்து செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் ஏராளமான மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சிபிஎஸ்இ கல்வி அதிகாரி ஒருவர், ஜூலை மாதத்தில் தேர்வுகளை நடத்த முடியாத பட்சத்தில் தேர்வை மேலும், தள்ளிவைக்க முடியாது. தேர்வு தொடர்பான அனைத்து பணிகளையும் முடித்து தேர்வு முடிவுகளை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடும் பட்சத்தில் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை பாதிக்கப்படக் கூடும். தவிர்க்க முடியாத பட்சத்தில் 10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பீடு திட்டத்தையே 12ம் வகுப்புக்கும் பின்பற்றப்படும். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார். கொரோனா இரண்டாம் அலையினால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் மாதத்தில் கல்வி வாரியம் தேர்வுகளை நடத்தினாலும் பெற்றோர்களும், மாணவர்களும் தேர்வுக்கு வர தயாராக இல்லை. ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தேர்வுகளை தாங்கள் எதிர்பார்ப்பதாக பெற்றோர்கள் கூறியுள்ளனர்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.