தமிழக பள்ளிக் கல்வித்துறையில் வரும் 2021-2022ம் கல்வி ஆண்டுக்கான தட்டச்சு, சுருக்கெழுத்து, இளநிலை உதவியாளர் போன்ற பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த விவரங்களை மாவட்ட வாரியாக சேகரிக்க பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை:
தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை ஆண்டுதோறும் அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணி இடங்களுக்கான விவரங்களை சேகரித்து, பின்னர் அது தொடர்பாக தேர்வுகளை நடத்தி அதன் மூலம் தேவையான பணியாளர்களை தேர்வு செய்வார்கள். அதன்படி, தமிழக கல்வித்துறையில் வரும் 2021-2022ம் கல்வி ஆண்டுக்கான உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சுருக்கான பணிகளுக்கு எந்தெந்த பள்ளிகளில் காலியிடங்கள் உள்ளது என்ற விவரத்தை சேகரிக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்க்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அந்த சுற்றைக்கையில், பள்ளிக் கல்வித்துறையில் 2021-2022ம் ஆண்டுக்குரிய தங்கள் நியமன அலகுக்கான உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 ஆகிய பதவிகளுக்கான நேரடி நியமனம் காலிப்பணியிட மதிப்பீட்டை தயார் செய்ய வேண்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு 15.3.2021ம் தேதி முதல் 14.3.2022 வரை பதவி உயர்வு, ஓய்வு பெறுவதால் ஏற்படக் கூடிய காலிப்பணி இடங்கள் குறித்த விவரங்களை மாவட்ட கல்வி அலுவலர்கள் தனித்தனியாக தயார் செய்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும்.
அவ்வாறு மாவட்ட கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்படும் விவரங்களுடன் முதன்மை கல்வி அலுவலர்கள் தங்களது நியமன அலகில் உள்ள மாவட்ட அளவில் தொகுப்புப் பட்டியலைத் தயார் செய்து பள்ளிக்கல்வி இணை இயக்குனருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Search This Blog
Sunday, May 02, 2021
Comments:0
Home
DGE/DSE/DEE
NEWS
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் தட்டச்சர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் – விபரங்கள் சேகரிப்பு!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் தட்டச்சர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் – விபரங்கள் சேகரிப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.