புதிய அரசு பதவியேற்று பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுவரும் நிலையில் பள்ளிக்கல்வி துறைக்கு புதிய ஆணையராக நந்தகுமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவு: வழிகாட்டு துறை நிர்வாக இயக்குநராக உள்ள நீரஜ்மிட்டல், தகவல் தொழில்நுட்ப செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். இந்தப் பதவியை உள்ளாட்சித்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா கூடுதலாக கவனித்து வந்தார். சர்க்கரை துறை ஆணையர் ஆனந்தகுமார், சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். இந்தப் பதவியில் இருந்த சஜன்சிங் சவான் மாற்றப்பட்டுள்ளார். சிப்காட் நிர்வாக இயக்குநர் குமரகுருபரன், இந்து அறநிலையத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பதவியை ராஜாமணி கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் நந்தகுமார் மாற்றப்பட்டு, பள்ளிக்கல்வித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். நில அளவை மற்றும் நில ஆவண கூடுதல் இயக்குநராக இருந்த டாக்டர் வி.பி.ஜெயசீலன், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநராகவும், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை துணை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியில் இருந்த பாஸ்கர பாண்டியன் மாற்றப்பட்டுள்ளார். தோட்டக்கலை மற்றும் தோட்டப் பயிர்கள் துணை இயக்குநர் சுப்பையன், பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
முதல்வர் அலுவலக செயலாளராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன், தொழில்துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொது தேர்தல் துணை சிறப்பு செயலாளர் ராஜாராமன், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இந்தப் பதவியில் இருந்த சுதா தேவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் அலுவலக செயலாளராக இருந்த சாய்குமார், நகர்ப்புற நிதி மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாட்டுக்கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியை பாஸ்கரன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். முதல்வர் அலுவலக செயலாளராக இருந்த விஜயகுமார், சிறு தொழில் கழக(டான்சி) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியில் இருந்த விபுநாயர் மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவி வீரராகவராவிடம் கூடுதல் பொறுப்பாக இருந்தது. தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகி நிறுவன நிர்வாக இயக்குநராக இருந்த சிவசண்முகராஜா, பூம்புகார் கப்பல் கழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியை ஆனந்தகுமார் கூடுதலாக கவனித்து வந்தார். தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநராக இருந்த சிவஞானம், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இந்தப் பதவியை வெங்கடாச்சலம் கூடுதலாக கவனித்து வந்தார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது
Search This Blog
Saturday, May 15, 2021
Comments:0
பள்ளிக்கல்வி துறைக்கு புதிய ஆணையர் நியமனம் - தமிழக அரசு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.