தமிழகத்தில் 2 ஆயிரம் டாக்டர்கள், 6 ஆயிரம் நர்சுகள் நியமனம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 16, 2021

1 Comments

தமிழகத்தில் 2 ஆயிரம் டாக்டர்கள், 6 ஆயிரம் நர்சுகள் நியமனம்

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக 2ஆயிரம் மருத்துவர்கள், 6 ஆயிரம் செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் 30,000க்கு அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். மேலும் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர். தினசரி கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்து வருவதால் மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 2500 மேல் உள்ளதால் அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் தவித்து வருவதாக புகார் வந்துள்ளது. அதனால் கூடுதலாக தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மருத்துவர்கள் மற்றும் 6 ஆயிரம் செவிலியர்கள் கொரோனா நோய்யாளிகளை கவனிக்க நியமிக்கப்பட உள்ளதாக சுகராதரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்று ஏற்படும் பெரும்பாலான நோயாளிகளுக்கு, மூச்சுத் திணறல் மற்றும் உடலில் ஆக்சிஜன் அளவு குறைவது உள்ளிட்ட பாதிப்புகளால், செயற்கை சுவாசம் முக்கிய தேவையாக உள்ளது. ஆனால் சில தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் அரசு மருத்துவமனைகளை தேடி வருகின்றனர். இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. 2 year diploma finish pannavagalukku job tharuvigala

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews