Breaking

Sunday, April 11, 2021

TNPSC உதவி பிரிவு அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நாளை முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உள்ள உதவி பிரிவு அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நாளை (ஏப்.12) முதல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உள்ள உதவி பிரிவு அலுவலர் (மொழிப் பெயர்ப்பு) பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தாரர்கள் ஏப்ரல் 12ம் தேதி முதல் ஏப்ரல் 22ம் தேதி வரை தங்களது ஒரிஜினல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த நாட்களுக்குள் விண்ணப்பத்தாரர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை எனில் அந்த விண்ணப்பத்தாரர்களுக்கு தேர்வு பணிகளில் கலந்துகொள்ள விருப்பம் இல்லை எனக்கருதி அந்த பதவிக்கு அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog