CA 2021 முதன்மை தேர்வு விண்ணப்ப பதிவு சிக்கல்கள் – தேர்வாணையம் விளக்கம்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 27, 2021

Comments:0

CA 2021 முதன்மை தேர்வு விண்ணப்ப பதிவு சிக்கல்கள் – தேர்வாணையம் விளக்கம்!!

2021ம் ஆண்டு CA முதன்மை தேர்வுகளுக்கான விண்ணப்பம் பூர்த்தி செய்ய அறிவிக்கப்பட்டுள்ள சமயத்தில், தற்போது பெருந்தொற்று பரவி வரும் நிலையில் அரசு பணியாளர்களின் ஒப்புகை சான்றிதழ் பெறுவதில் சிக்கல்கள் உள்ளதால் இது குறித்து தேர்வு ஆணையம் விளக்கமளித்துள்ளது.
10% மேல் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட மாவட்டத்தை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்க வேண்டும் : மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை உத்தரவு.
CA 2021 தேர்வு:
CA 2021 ஜூன் மாத முதல்நிலை தேர்வுகள் ஜூன் மாதம் 24, 26, 28 மற்றும் 30ம் தேதிகளில் நடக்க இருந்தது. இத்தேர்வுக்கு விண்ணப்ப பதிவு ஏப்ரல் 20ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான இறுதி நாள் மே 4 ஆகும். மேலும், விண்ணப்பிக்க தவறியவர்கள் மே 7ம் தேதி வரை தாமத கட்டணமாக ரூ.600 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் உள்ளதால் தற்போது பல முக்கிய தேர்வுகளும் நாடு முழுவதும் தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. CA தேர்வு விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது அரசு அதிகாரி / கல்வி நிறுவனத்தின் தலைவர் ஆகியோரிடமிருந்து ஒப்புகை சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
'வாட்ஸ் ஆப் குழு தகவலுக்கு அட்மின் பொறுப்பாக முடியாது': மும்பை உயர்நீதி மன்றம்
தற்போது கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளதால், ஒப்புகை சான்றிதழ் பெறுவதில் சிரமங்கள் உள்ளது. மேலும், தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் தேர்வர்களுக்கான ரோல் எண்ணும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தேர்வு வாரியம், ஒப்புகை சான்றிதழ் தொடர்பான புகைப்படங்கள் அல்லது கையொப்பம் கிடைக்காத மாணவர்கள் ஜூன் 2021 முதல்நிலை தேர்வுக்கான விண்ணப்ப படிவத்துடன் தங்கள் ஆதார் அட்டையைப் பதிவேற்ற அனுமதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான விவரங்களை தேர்வு வாரியத்தின் உறுப்பினர் / அரசு அதிகாரி / கல்வி நிறுவனத்தின் தலைவர் கையொப்பமிட்டு ஐ.சி.ஏ.ஐ பவன், சி -1, பிரிவு -1 நொய்டா 201301 இல் உள்ள நிறுவனத்திற்கு அனுப்பலாம் அல்லது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். சீனியர் செகண்டரி தேர்வுகளின் அட்மிட் கார்டு / ரோல் எண்ணைப் பெறாத மாணவர்கள், தேர்வில் கலந்து கொள்ளப் போவதாகவும், மற்றும் நடைமுறையில் உள்ள அவர்களின் அட்மிட் கார்டு / ரோல் எண்ணை தேர்வு வாரியத்தின் முகவரிக்கு அனுப்பலாம் என்று ICAI தனது அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews