ஏப்ரலில் பாதி மாதம் கடந்த பிறகும் மார்ச் பென்ஷன் வழங்கவில்லை
ஓய்வுபெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் வேதனை.
தமிழ்நாடு அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங் கன்வாடி ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியமாக சிறப்பு ஓய்வூதியம் என்ற பெயரில் தமிழக அரசு 2000 மட்டும் வழங்குகிறது.
இதை தவிர வேறு எந்த சிறப்புப் படிகளும் அவர் களுக்கு இல்லை. இந்த 2 ஆயிரத்தை வைத்து வாழ முடியாமல், கொண்டு விழிபிதுங்கி வேதனையில் உள்ளனர்.
இந்நிலையில் அனைத்து துறைகளிலும் உள்ள ஓய்வூதியர்கள் மாத இறுதியில் பென்ஷன் பெற்று விட்டனர். ஆனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட் டங்களில் ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழி யர்களுக்கு மட்டும் மார்ச் மாத பென்ஷன் ஏப்ரல்16 தேதி கடந்த பின்னரும் வழங்கவில்லை.
ஓய்வுபெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் சங்க பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட அலுவலர்களை அணுகி கேட்டபோது, அரசிடம் இருந்து நிதி வர வில்லை என கைவிரிப்பதாக கூறப்படுகிறது. இத னால் ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் நிலை மோசமாகல் உள்ளதாக அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
எனவே, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட கலெக் டர்கள் தலையிட்டு உடனடியாக மார்ச் மாத பென்ஷன் வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
Tuesday, April 20, 2021
மார்ச் பென்ஷன் வழங்கவில்லை - ஓய்வுபெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் வேதனை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.