'கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும்' என, பல்கலைகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, உயர்கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், கல்லுாரிகளில் நேரடி வகுப்புகளுக்கு, இன்னும் அரசு அனுமதி அளிக்கவில்லை. பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டும், தினமும் கல்லுாரிகளுக்கு வந்து, அங்கிருந்தவாறு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும்.
இறுதி 'செமஸ்டர்' மாணவர்களுக்கும், தற்போது நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. அரசு அனுமதித்தால் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். எனவே, தற்போதைய நிலையில் அனைத்து மாணவர்களுக்கும், ஆன்லைனிலேயே வகுப்பும், தேர்வும் நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Friday, April 09, 2021
கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு தொடரும்
STUDENTS
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.