' பரிக்ஷா பே சர்ச்சா' என்ற பெயரில் மாணவர்களு டன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வழியாக கலந்துரையாடும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தகவலை பிரதமர் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை தெரிவித் துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது பாடங்களிலிருந்து விரிவான அளவில் பல குதூகலமான கேள்விக
ளுடன் இந்நிகழ்ச்சி இருக்கும். துணிச்சல்மிக்க தேர்வு எழுதும் வீரர்க
ளுடன் பெற்றோருடன், ஆசிரியர்களுடன் ஒரு மறக்கமுடியாத கலந் துரையாடலாக நிகழ்ச்சி இடம் பெறும். புதன்கிழமை (ஏப்.7) இரவு 7 மணிக்கு இந்நிகழ்ச்சியைப் பாருங்கள் என அதில் பதிவிட்டுள்ளார் மேலும் அவர் தனது சுட்டுரைப் பதிவுடன் இந்நிகழ்ச்சி தொடர் பாக ஒரு விடியோவையும் இணைத்துள்ளார். அந்த விடியோ பதி வில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது
கடந்த ஓராண்டாக கரோனா தீநுண்மியின் பிடியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் உங்களுடன் நேரில் கலந்துரையா டும் அழகான வாய்ப்பைக் கைவிட வேண்டியுள்ளது. அதற்கு பதி லாக புதிய வடிவில் இந்தமுறை உங்களை நான் சந்திக்கிறேன்
மாணவர்கள் தேர்வுகளை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும் மாறாக அதை வாழ்க்கைக்கான கனவுகளின் ஒரு வரம்பாக காணக் கூடாது. மாணவர்களுடன் ஒரு நண்பனாக நான் பேசுவேன். அது போல பெற்றோர்களுடனும் பள்ளி ஆசிரியர்களுடனும் இந்த நிகழ்ச் சியின்போது கலந்துரையாடுவேன்.
பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் சில நேரங்களில் எது பாரமாக இருக்கிறது என்பது பற்றியும் நான் பேசுவேன். பரிக்ஷா பே சர்ச்சா' எனும் இந் நிகழ்ச்சி தேர்வு பற்றியதுதான். இருப்பினும், தேர் வுகளைப்பற்றி கலந்துரையாடுவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை என விடியோ பதிவில் கூறியிருக்கிறார்
பிரதமரும் மாணவர்களும் நேரடியாகக் கலந்துகொண்ட பரீக்ஷா பே சர்ச்சா' நிகழ்ச்சி முதல் முறையாக தில்லி தால்கடோரா விளை யாட்டு அரங்கில் 2018 பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெற்றது. நான்கா வது ஆண்டாக இந்நிகழ்ச்சி வரும் ஏப்.7-ம் தேதி நடைபெறுகிறது
Tuesday, April 06, 2021
'பரீக்ஷா பே சர்ச்சா': மாணவர்களுடன் பிரதமர் நாளை கலந்துரையாடல்
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.