Breaking

Wednesday, April 21, 2021

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்.21 04.2021

Bridge Course & Work Book - கல்வித் தொலைக்காட்சி மூலமாக அனைத்து மாணவர்களும் காணொலிகளை பார்த்து பயன் பெறுவதை உறுதி செய்யதிட அனைத்து பள்ளி தலைமையாசியர்களுக்கும் உத்தரவு
16.04.2021 அன்று பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற காணொளிக்காட்சி கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள்
அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு செய்முறைத் தேர்வு நடைபெறுவதால், செய்முறைத் தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வருகை புரிய வேண்டும். செய்முறை தேர்வு இல்லாத பிரிவு மாணவர்களுக்கு (Non Practical Groups Strudents) 17.04.2021 முதல் Study Leave விடப்பட்டிருக்கிறது. செய்முறைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் தங்களது செய்முறை தேர்வு முடிந்த அடுத்த நாள் முதல் Study Leave விடப்பட வேண்டுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி. இயக்குநர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரைகளின்படி, செய்முறைத் தேர்வு இல்லாத மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்கக்கூடாது என மீண்டும் வலியுறுத்தி தெரிவிக்கப்படுகிறது. மேற்காண் வழிகாட்டுதலை பின்பற்றாத பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் மீது துறை சார்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், மேலும், அப்பள்ளிகளின் விதிமீறிய செயல்பாடுகள் இயக்குநர் அவர்களுக்கு தெரிவிக்கப்படும் எனவும் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ! முதல்வர்களுக்குத் தெரியிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog