முதன்மைச் செயலர் / ஆணையர் , கருவூலம் மற்றும் கணக்குத்துறை , சென்னை அவர்களின் காணொளி காட்சி ஆய்வுக் கூட்டத்தில் IFHRMS திட்டத்தின் அடுத்த நடவடிக்கையாக e - SR தொடர்பான பணிகளை எதிர்வரும் மே மாதம் 10 ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டது . தற்போது e - SR Correction மென்பொருளில் ஒவ்வொரு பணியாளருக்கும் உள்ள e - SR- ல் இன்றைய தேதிவரை உள்ள அனைத்து பணி தொடர்பான பதிவுகளையும் மேற்கொள்ள வசதியாக Edit Option வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியானது மே மாதம் 10 ஆம் தேதி வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். எனவே , தங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களின் பணி தொடர்பான அனைத்து விவரங்களையும் உடன் பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் , பணிப்பதிவேட்டில் முதல்பக்கத்தில் உள்ள Bio Data பகுதியை மட்டும் e - SR- ல் Correction செய்ய இயலாது.
அந்த பகுதியில் ஏதும் பதிவுகள் விடுபட்டிருந்தாலோ அல்லது திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தாலோ பணிப்பதிவேட்டின் முதல் பக்கத்ததை Scan செய்து அதற்கு Ticket ஏற்படுத்தி சரிசெய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறாக அனைத்து பணிகளையும் மே மாதம் 10 ஆம் தேதிக்குள் முடித்து இத்திட்டம் திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட முழு ஒத்துழைப்பு நல்குமாறு அனைத்து பணம் பெறும் அலுவலர்களையும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Search This Blog
Saturday, April 24, 2021
Comments:0
IFHRMS - ESR தொடர்பான பணிகளை எதிர்வரும் மே மாதம் 10 ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.