பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது செய்முறை தேர்வு, இன்று முடிவு - மாணவர்கள் இனி பள்ளிக்கு வர வேண்டாம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 22, 2021

1 Comments

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது செய்முறை தேர்வு, இன்று முடிவு - மாணவர்கள் இனி பள்ளிக்கு வர வேண்டாம்.

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது செய்முறை தேர்வு, இன்று முடிகிறது. மாணவர்கள் இனி பள்ளிக்கு வர வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, மே, 5ல் பொதுத் தேர்வு நடப்பதாக இருந்தது. கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால், இந்த தேர்வை அரசு தள்ளி வைத்துள்ளது.அதே நேரம், பொதுத் தேர்வுக்கு முந்தைய பொது செய்முறைத் தேர்வு திட்டமிட்ட படி, இந்த மாதம், 16ம் தேதிதுவங்கியது.
COVID -19 -Non Wearing of Face mask, violation of Social Distancing- Spitting in the Public Places -Spot fine -ORDER ISSUED இந்த தேர்வு ஐந்து நாட்கள் நடத்தப்பட்டன. 7,000 பள்ளிகளைச் சேர்ந்த, இரண்டு லட்சம் மாணவ - மாணவியர் இதில்பங்கேற்றனர்.இந்த செய்முறைத் தேர்வு இன்றுடன் முடிகிறது. 'இனி, மாணவ - மாணவியர் யாரும் பள்ளிகளுக்கு வர வேண்டாம். 'ஹால் டிக்கெட்' பெற்று, பொதுத் தேர்வுக்கு நேரடியாக வந்தால் போதும்.அதுவரை வீட்டில் இருந்தே தேர்வுக்கு தயாராக வேண்டும்' என, பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 comment:

  1. 🌉🌅 *HSPGTA* 🌉🌅
    *நன்மையும்- தீமையும்*.
    ➖➖ *நாடுக*➖➖➖.
    🌅➖🌅 *22-4-21* ➖🌅.
    🟣 *நாளுக்குநாள்*.
    *நிமிடத்துக்கு நிமிடம்*.
    ⚫ *கொரோனாத் தொற்றின் இரண்டாம் அலை*.
    🟣 *உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவித்தது போல*.
    ➖➖➖➖➖➖➖➖➖ *கைமீறிப் போய்விட்ட*
    ➖➖➖➖➖➖➖➖➖
    ⚫ *இந்த இக்கட்டான சூழலில்*
    *மக்கள்நல அரசின் ஒரே நோக்கமாக அமைய வேண்டியது** .
    🟣 *தீவிர நோய்ப் பரவலைத் தடுப்பதும் தணிப்பதும்தானே*??
    ⚫ *HSPGTA--உள்ளிட்ட அனைத்து ஆசிரியச் சங்கங்களும்*
    🟣 *கல்வியாளர்களும்*.
    *ஊடகத்துறையினரும்* ⚫ *அனைத்து அரசியல் இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில்* .
    ➖➖➖➖➖➖➖➖➖ *+2---தேர்வை ஒத்தி வைத்த அரசாங்கம்*.
    ➖➖➖➖➖➖➖➖➖
    இப்போது..
    🟣 *கோடை விடுமுறையை அறிவிப்பதிலும்*.
    🔵 *அதிக தாமதம் காட்டுவது அதிர்ச்சியைத் தருகிறது*
    ⚫ *இந்திய துணைக் கண்டத்தில்*--.
    🟣 *இதுவரை*
    *ஏழு மாநிலங்கள்* .
    *கோடை விடுமுறையை அறிவித்துவிட்டன*
    🔵 *உச்ச நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும்கூட*
    *நேர்நிலை விசாரணை முறைமைகளை மாற்றி*.
    ⚫ *புதிய வழிமுறைகளை நடைமுறை படுத்திவிட்டன*
    🟣 *ஆழிப் பேரலைபோல*.---
    🔵 *அழிவுப் பேரலையாம் கொரோனாத் தொற்றின்* .
    ⚫ *ஒருநாள் பாதிப்பு* .
    *இந்திய அளவில்*
    *3,00,000--ஐத் தாண்டி* *ருத்ர தாண்டவமாடிக்* *கொண்டிருக்கிறது*
    🟣 *மாண்டவர் எண்ணிக்கையோ*.
    *ஒரு நாளைக்கு 2000--ஐக் கடந்து விட்டது*.
    🔵 *தமிழ்நாட்டிலும் ஒருநாள் பாதிப்பு 11,681என்ற உச்சத்தைத் தொட்டு*--
    *உயிரிழப்பு 53---ஆக உயர்ந்து*
    🟢 *மானுடவியலரையும் மருத்துவர்களையும் கலங்க வைத்து*.
    ⚫ *மக்களையும் உருக்குலைத்து வருகிறது*.
    🟢 *தேர்தல் பணிக்குச் சென்ற ஆசிரியர்களில்*.
    ⚫ *நூற்றுக் கணக்கானவர்கள்*.
    🟣 *கடந்த இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து* .
    🟢 *கொரோனாத் தொற்றுக்கு ஆளாகிவரும்*
    🟣 *ஊடகச் செய்திகளைக் கண்டும்----கேட்டும்*.
    ⚫ *பள்ளிக் கல்வித்துறை இன்னமும்*.
    *பாராமுகமாக இருப்பது நியாயமா*.????
    🔴 *இது ஊக்க ஊதியச் சிக்கலல்ல--ஒத்திவைக்க*.
    ➖➖ *உயிர் பிரச்சனை*
    🔵 *இது. --வளரூதிய வழக்கல்ல---வாய்தா கொடுக்க*
    ➖➖ *வாழ்க்கை*!!!
    ⚫ *+2--செயல்முறைத் தேர்வில் தொடர்புடைய ஆசிரியப் பெருமக்களைத் தவிர*.
    🔵 *மற்ற எல்லாநிலை ஆசிரியர்களுக்கும்* .
    ⚫ *எல்லாவகை பள்ளிகளுக்கும்*
    *கோடை விடுமுறையை*..
    🟣 *அரசு உடனே அறிவிக்க *வேண்டுமென்று*
    ⚫ *HSPGTA*----
    *வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது*
    🔵 *தொற்றின் தீவிரமும்---பரவலும் தணியும்வரை*
    🟣 *இயல்புநிலை மீளப்பெறும்வரை*.
    🟢 *ஆசிரியர்களைப்*
    *பள்ளிக்கு அழைப்பதையோ அவர்களாக வருவதையோ*
    🟣 *எக் காரணத்தை முன்னிட்டும் அரசு அனுமதிக்கக் கூடாது*
    🔵 *முதல் டோஸ் போட்ட பிறகு-- 21,000 பேருக்கு*
    *இரண்டு டோசும் போட்ட பிறகு-5,500 பேருக்கு*
    ⚫ *இந்தப் நோயரக்கன்--பேயரக்கனாக மறைந்து மறைந்து தாக்குவதை நாம்----எண்ணிப் பார்க்க வேண்டாமா*
    🟣 *+2---பொதுத் தேர்வு வினாத்தாள்களை அந்தந்த மாவட்ட மையங்களுக்குப் பாதுகாப்புடன் அனுப்பி விட்டதால்*.
    🟣 *வாய்ப்பன செய்யானாக*.
    ⚫ *வருவன உணரானாக*.
    🔵 *வரலாறு அறியானாக* .
    ➖➖ *இருந்துவிட்டது துறை என்று யாரும் நுரைக்க இடமில்லாமல்*..
    🟣 *நன்மையும் தீமையும் நாடி*.
    ⚫ *அஞ்சுவது அஞ்சி*.
    🔵 *ஆவதறிந்து*
    ➖➖➖➖➖➖➖➖➖ 🟣 *அரசு---விரைந்து விடுமுறை* *அறிவிப்பை* *வெளியிட வேண்டுமென்று*.
    🔵 *HSPGTA*
    *ஆசிரியர் பெருஞ் சமூகத்தின் சார்பாக*
    🔴 *மீண்டும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது*- *நன்றி*.
    ➖➖➖➖➖➖➖➖➖🟣 *முனைவர்*
    *இரா.சம்பத்குமார்*
    *HSPGTA*

    .

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews