தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மீன்வ ளர்ப்பு குறித்து இணையதளம் மூலம் பயிற்சி முகாம் ஏப்.23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இதுகுறித்து மீன்வளக் கல்லூரி முதல்வர் பா. சுந்தரமூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற் றும் ஆராய்ச்சி நிலையத்தில், உயிர் கூழ்ம தொழில்நுட்ப முறை யில் மீன் வளர்ப்பு குறித்து பயிற்சி முகாம் இணையதளம் வழி யாக ஏப்.23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
பயிற்சியின்போது, உயிர் கூழ்ம திறன், அதன் முக்கியத்துவம், அத்தொழில்நுட்பத்திற்கு ஏற்ற நீர் வாழ் உயிரினங்களின் வளர்ப்பு முறைகள், பயன்பாடுகள், செயல்திறன், எதிர் கொள்ளும் சவால் கள், பொருளாதார மேலாண்மை ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் தூத்துக்குடி யூனி யன் வங்கி கிளையில் (Union Bank of India), வங்கி கணக்கு எண்: 364902010097764, IFSC : UBIN0536491 என்ற பெயரில் ரூ. 300 செலுத்தி பதிவுசெய்யவேண்டும். பயிற்சியில் கலந்து கொள் வோருக்கு பயிற்சியின் முடிவில் சான்று, பயிற்சி கையேடு மின் அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தொழில் முனை வோர் மற்றும் இதர நபர்கள் ஏப்.22- ஆம் தேதி மாலை 5 மணிக் குள் 09442288850 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கும், athithan@tnfu.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Search This Blog
Monday, April 19, 2021
Comments:0
மீன் வளக் கல்லூரியில் ஏப்.23இல் இணையதள மீன் வளர்ப்பு பயிற்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.