பழங்குடியின வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு – அலுவலர் அறிவிப்பு!!
தமிழ்நாடு அரசின் சார்பில் பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஏப்ரல் 26ம் தேதி நடக்க இருந்த நிலையில், தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் பரவி வருகிறது. ஒரு நாளில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 10,000 ஐ கடந்து விட்டது. இதனால் தமிழக அரசு கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு தினமும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையிலும் இரவு நேர ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்.21 04.2021 மேலும், வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவினால் அரசு பல முக்கிய தேர்வுகள் மற்றும் நிகழ்வுகளையும் தள்ளி வைத்துள்ளது. அதன்படி, சென்னையில் ஏப்ரல் 26ம் தேதி நடக்க இருந்த பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான வேலைவாய்ப்பு முகாம், தேசிய தொழிற்பயிற்சி மையம் சார்பாக நடக்க இருந்தது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் அடுத்த அறிவிப்பு வரும் வரை முகாம் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலினை, சென்னை பட்டியலின, பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய தொழிற்பயிற்சி மையத்தின் பிராந்திய வேலைவாய்ப்பு துணை அலுவலர் சுஜித்குமார் சாகு தனது செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.