கற்போம் எழுதுவோம் தேர்வு தேதி 16.05.2021க்கு மாற்றம்
தமிழகத்தில் , 2020-2021ஆம் நிதியாண்டில் , 15 வயதுக்கு மேற்பட்ட , முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாத 3.10 இலட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில் கற்போம் எழுதுவோம் இயக்கம் , மத்திய மற்றும் மாநில அரசுகளின் 60:40 என்கிற நிதிப்பங்களிப்பின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயின்று வருகின்ற கற்போருக்கு 27.03.2021 அன்று இறுதி அடைவுத் தேர்வு நடத்தப்பட திட்டமிடப்பட்டது. நிருவாக காரணங்களினால் இத்தேர்வினை 16.05.2021 அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தேர்விற்கென , மாவட்டத்தில் , பெறப்பட்டுள்ள வினா - விடைத் தாள் கட்டுகள் , வருகைப் பதிவுப் படிவம் , தேர்வு நடத்துதல் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பேனா இவை அனைத்தையும் முதன்மைக் கல்வி அலுவலா / வட்டார மேற்பார்வையாளர்களின் கோடிக் கண்காணிப்பில் இருக்கும் வகையில் உள்ள ஒரு அறையில் வைத்து , இரு பூட்டு முறையில் சீலிட்டு , மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டும். மறு அறிவிப்பு வரும் வரை அறையினை எக்காரணங்கொண்டும் திறக்கக் கூடாது . மேலும் , கற்போம் எழுதுவோம் இயக்ககத்தின் கீழ் சேர்க்கப்பட்டு பயின்று வருகின்ற கற்போர்கள் அனைவரும் அவர்களுக்கேதுவான நேரத்தில் , கல்வி மையம் / வேலை பார்க்குமிடம் / வீட்டுவழிக் கல்வி ஆகிய ஏதாவதொரு நிலையில் கற்றல் , கற்பித்தல் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறும் வகையில் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Search This Blog
Monday, March 22, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.