பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிப்பு: மத்திய அரசு நடவடிக்கை. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 31, 2021

Comments:0

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிப்பு: மத்திய அரசு நடவடிக்கை.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தனிமனித அடையாள ஆவணமான ஆதார் கார்டுகள் அனைத்து விஷயங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. பான் கார்டுகளையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான கால அவகாசமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக சென்ற ஆண்டின் ஜூன் மாதம் மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில் பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பல முறை ஆதார் பான் இணைப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்த மத்திய அரசு இந்த முறை நீட்டிக்காமல் மார்ச் 31-ம் தேதியான இன்றைக்குள் இணைக்க வேண்டும் என அறிவித்தது. இதனால், இன்று காலை முதல் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க பொதுமக்கள் இணையதளத்தில் குவிந்தனர்.
9-ம் வகுப்பு தேர்வுகள் அடிப்படையில் 10-ம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்க பரிசீலனை
இதனால், இன்று காலை முதலே வருமான வரித்துறை வலைத்தளம் முடங்கியது. இதனால், அச்சமடைந்த பொதுமக்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் முடங்கிய வருமான வரித்துறை வலைத்தளத்தை சரிசெய்ய வேண்டும் என்று சமூக வலைத்தலங்களில் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசத்தை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று நோயால் ஏற்பட்டுள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. தற்போதைய வருமான வரிச் சட்டத்தின்படி ஆதார் கார்டுடன் பான் எண் இணைக்கப்படாவிட்டால் அந்த பான் கார்டு செயலிழந்ததாக அறிவிக்கப்படும். மேலும், செயலிழந்த பான் கார்டுகளை 2021 ஜூலை 1ம் தேதிக்கு மேல் பயன்படுத்த முடியாது. பான் கார்டு விவரங்களை வழங்காவிட்டால் வருமான வரிச் சட்டத்தின்படி ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும். புதிய நிதி மசோதாவின் படி, பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்களிடம் குறைந்தது 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான - ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தள்ளிவைப்பு : தேர்வர்கள் ஏமாற்றம்

CLICK HERE TO READ OFFICIAL NEWS

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews