ஊக்க ஊதிய உயர்வுக்கான நிதித்துறை ஒப்புதல் எப்போது கிடைக்கும்? ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு!!
ICICI வங்கியில் முழு நேர பணிக்கான நேர்முகத்தேர்வு - தேதி : 05.03.21 & 06.03.21
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பத்தாம் தேதிக்கு பின்னர் பணியில் சேரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு அல்லது முன் ஊதிய உயர்வு கிடையாது என அரசு பணியாளர் துறை அரசாணை (அரசாணை எண்.37 நாள்: 10.03.2020) மூலம் அறிவித்தது. அதேசமயம் 10-3-2020 க்கு முன் உயர்கல்வி தேர்ச்சி அல்லது துறைத்தேர்வுகள் தேர்ச்சி பெற்று நிர்வாக காரணங்கள் அல்லது தனிநபரின் தாமதமான கோரிக்கையினால் ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் நிதித் துறை ஒப்புதல் பெற்று ஊக்க ஊதிய உயர்வு பெற்று கொள்ளலாம் ( அரசாணை எண்:116 நாள்:15-10-2020) என அரசு அறிவித்திருந்தது.

இதன்காரணமாக கல்வித் துறையில் கடந்த நவம்பர் மாதம் சுற்றறிக்கை அனுப்பி 10-3-2020 க்கு முன் உயர் கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியுள்ளவர்கள் பட்டியல் மற்றும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை ஆகியவற்றை முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் பெறப்பட்டு நிதித்துறை ஒப்புதல் பெற அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கு இம்மாதம் 31ஆம் தேதியே கடைசி நாளாகும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாலும் இதுவரை நிதித் துறை ஒப்புதல் பட்டியல் கிடைக்கப் பெறாததாலும் எப்போது நிதித்துறை ஒப்புதல் கிடைக்கும் என ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியுள்ள ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.