மருத்துவ படிப்பில் சேர, அரசு பள்ளியில் படித்ததற்கான சான்று வழங்கக் கோரி, மாணவி தாக்கல் செய்த வழக்கில், அரசு தரப்பில் விபரம் பெற்று தெரிவிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு உத்தரவிட்டது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே புல்லுதேரியைச் சேர்ந்த, நாகவள்ளி ஏற்கனவே தாக்கல் செய்த மனு: என் மகள் சவுந்தர்யா, 10ம் வகுப்பு வரை, அரசு பள்ளியில் படித்தார். பொதுத் தேர்வில், 452 மதிப்பெண் பெற்றார். மாவட்ட அளவில் முதல், 10 இடங்களை பெறும் ஆதிதிராவிடர் மாணவர்களை, தனியார் பள்ளியில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க வைக்கும் அரசின் சிறப்பு திட்டம் உள்ளது.அத்திட்டத்தின் உதவியில் சவுந்தர்யா, தனியார் பள்ளியில் பிளஸ் 2 முடித்தார். 83 சதவீத மதிப்பெண் பெற்றார்.
2020ல், 'நீட்' தேர்வில், 158 மதிப்பெண் பெற்றார்.அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில், 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, தமிழக அரசு கொண்டு வந்தது. இதன் அடிப்படையில், சலுகை பெற, அரசு பள்ளியில் படித்ததற்குரிய சான்று கோரி, கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் சவுந்தர்யா விண்ணப்பித்தார்.
Private Covid 19 Vaccination Centres - PDF
அவர், '10ம் வகுப்பு வரை அரசு பள்ளி, பிளஸ் 2 வகுப்பை தனியார் பள்ளியில் படித்ததால், சான்று வழங்க முடியாது' என, நிராகரித்தார். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு நாகவள்ளி குறிப்பிட்டார். தனி நீதிபதி உத்தரவில், 'இதில் எவ்வித நிவாரணமும் வழங்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறேன். மனுதாரரின் மகளை போன்றவர்கள் பாதிக்கப்படாதவாறு, இட ஒதுக்கீடு சலுகை கிடைக்கும் வகையில், அரசு அடுத்த கல்வியாண்டில் தீர்வு காணும் என, இந்நீதிமன்றம் நம்புகிறது' என்றார். Government Covid 19 Vaccination Centres - PDF
இதை எதிர்த்து, சவுந்தர்யா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு, 'மருத்துவ படிப்பிற்கான அனைத்து கலந்தாய்வுகளும் முடிந்து விட்டன. அரசிடம் விபரம் பெற்று தெரிவிக்க அவகாசம் தேவை' என, தெரிவித்தது. இதை அனுமதித்த நீதிபதிகள், 'மார்ச் 11ல் உத்தரவு பிறப்பிக்கப்படும்' என்றனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.