தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் செயல்படாத காரணத்தால் பள்ளி வளாகங்களில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் உள்ள கழிப்பறை வசதி, குடிநீர் வசதி குறித்து அரசின் ’சாகன்’ தளத்தில் மாதந்தோறும் பதிவேற்றம் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தொடக்கப்பள்ளி அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. அதன்பின் ஆன்லைன் மூலமாக 10 மாதங்களாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன் பின்னர் 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
அதன்பின் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகாமாக பரவி வருகிறது. இதன் காரணமாக 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் யாரும் எதிர்பாராத விதமாக தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் பள்ளிகளில் சில மாற்றங்களை செய்ய தொடக்கப்பள்ளி இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், “அனைத்து ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளிலும் கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் வசதி உள்ளதா” என அரசின் ‘சாகன்’ தளத்தில் மாதந்தோறும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
இதன் மூலமாக தொடக்கப்பள்ளி இயக்குநகரத்திற்கு கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்வது குறித்த விவரங்களை ‘சாகன்’ தளத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இது குறித்த வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும். இந்த செயல்பாடுகள் தடையின்றி நடைபெறுகிறதா என உறுதி செய்யப்பட வேண்டும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.