Breaking

Friday, March 05, 2021

NATA நுழைவுத் தேர்வு விண்ணப்பம் இன்று தொடக்கம்

பி.ஆர்க். எனப்படும் இளநிலை கட்டிடவியல் பொறியியல் படிப்பில் சேருவதற்கான ‘நாடா’ (தேசிய கட்டிடவியல் திறனறித் தேர்வு) நுழைவுத் தேர்வுக்கு இன்று (மார்ச் 5) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என இந்தியஆர்கிடெக்ட் கவுன்சில் அறிவித்துள்ளது.
ஆண்டுக்கு 2 முறை தேர்வு
பி.ஆர்க். படிப்பில் சேர ‘நாடா’நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வை இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் நடத்தி வருகிறது. இந்தத் தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு, 2019-ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 2 முறை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2021-ம் ஆண்டுக்கான ‘நாடா’ தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம் - நாள்: 06.03.2021,சனிக்கிழமை
அதன்படி, பி.ஆர்க். (5 ஆண்டு) படிப்பில் சேர முதல் ‘நாடா’ தேர்வு எழுத விரும்புவோர் மார்ச் 5-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையும், 2-ம் தேர்வு எழுத விரும்புவோர் மார்ச் 5-ம் தேதி முதல் மே 30-ம் தேதி வரையும் http://nata.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். ஏப்.10-ல் முதல் தேர்வு முதல் தேர்வு ஏப்.10-ம் தேதி நடைபெறும். அதற்கான முடிவுகள் 14-ம் தேதி வெளியிடப்படும். 2-ம் தேர்வு ஜூன் 12-ம் தேதி நடத்தப்பட்டு 16-ம் தேதி முடிவு வெளியிடப்படும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை ‘நாடா’வின் இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு சனிக்கிழமை - விடுமுறை கோருதல் சார்ந்து - பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு கோரிக்கை!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog