Breaking

Saturday, March 13, 2021

மாணவர் சேர்க்கைக்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம்: பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது பிறப்பு சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியசுற்றறிக்கை:
சினிமா சார்ந்த இலவச திறன் பயிற்சி!
தமிழகத்தில் குழந்தையின் பெயரை பிறந்தநாள் முதல் 12 மாதம் வரை இலவசமாக பதிவுசெய்து கொள்ளலாம். 2000-ம்ஆண்டுக்கு முன் பெயரின்றி பதிவுசெய்யப்பட்ட பிறப்புகள் அனைத்துக்கும் 2024-ம் ஆண்டு வரைபெயருடன் பதிவு செய்ய காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குரிய தாமத கட்டணம் செலுத்தி பெயரை பதிவுசெய்து பிறப்பு சான்றிதழ் பெறலாம். ஒருமுறை பதிவுசெய்த பெயரை எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. இதுதொடர்பாக விழிப்புணர்வை அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்களும் பெற்றோர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
துறை தேர்வுகளுக்கு விடைக்குறிப்பு வெளியீடு - PDF
மேலும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழையும் கட்டாயம் பெற வேண்டும். இந்த விவகாரம் சார்ந்த அறிவுறுத்தல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog