புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவ சான்றிதழ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க மார்ச் 15 ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை:
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர், தகுதி வாய்ந்த சவக்கிடங்கு உதவியாளர், குடல் வாய் பாதுகாப்பு முறை, ரத்த சேகரிப்பு முறை போன்ற சான்றிதழ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடப்பிரிவில் சேர்ந்து பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.300 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த படிப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் விருப்பப்பட்டால் ஜிப்மர் அவசரகால சிகிச்சை மையத்தில் மாத உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்படும். இந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் www.jipmer.edu.in ஜிப்மர் இணையதளம் மற்றும் ஜிப்மர் கல்விப் பிரிவு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் 15-ம் தேதி மாலை 4.30 மணிக்குள் ஜிப்மர் கல்விப் பிரிவு முதல்வர் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இந்த படிப்புகளுக்கான நேர்காணல் மார்ச் மாதம் 19 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஜிப்மர் அகாடமிக் சென்டர் 3-வது மாடியில் உள்ள தேர்வு அறை 3-ல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்மர் அவசர மையத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு மாதம் ரூ.3,713 உதவித்தொகை வழங்கப்படுகின்றது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.