Breaking

Sunday, March 14, 2021

அஞ்சல் வாக்குச்சீட்டில் வாக்களிப்பது எப்படி?


தபால் வாக்குச்சீட்டு, உறுதிமொழிப் படிவம் உள்ளிட்டவற்றைக் கொண்ட தபால் உறை உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதனைப் பிரித்து, கீழே விளக்கப்பட்ட நடைமுறையை கவனமாக பின்பற்றி உங்கள் வாக்கினை செல்லத்தக்க வாக்காக அளியுங்கள்‌. உறுதிமொழி படிவத்தில் (படிவம் 13-A) அஞ்சல் வாக்குச் சீட்டு எண் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு அதன்பின் சான்றொப்பம் இடும் அலுவலரிடம் சான்றொப்பமும் அவரது பதவிக்கான முத்திரையும் பெற வேண்டும்.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கையேடு - சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021 - (275 PAGES ) - PDF
தபால் வாக்குச் சீட்டில் தாங்கள் தேர்வு செய்ய விரும்பும் வேட்பாளரின் சின்னத்திற்கு அருகில் உள்ள காலியிடத்தில் டிக் குறியீடு செய்யவேண்டும். தபால் வாக்குச் சீட்டினை மட்டும் அதற்குரிய Cover A (படிவம் 13-B)-ன் உள்ளே வைத்து ஓட்ட வேண்டும் பின்னர் Cover A -ன் மேல் தபால் வாக்கு சீட்டின் வரிசை எண் குறிப்பிடப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பிறகு உறுதி மொழி படிவத்தையும் (படிவம் 13-A) தபால் வாக்குச் சீட்டு வைத்து ஓட்டப்பட்ட Cover - A ( படிவம் 13 - B), பெரிய Cover B (படிவம் 13 - C) - யினுள் வைத்து ஓட்டப்பட வேண்டும் பின்னர் Cover B - ன் மேல் உரிய இடத்தில் வாக்காளர் கையொப்பம் செய்து பின்னர் சட்டமன்ற தேர்தலுக்காக வைக்கப்பட்டுள்ள Trunk Box - ல் இட வேண்டும்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களா ? ZONAL OFFICER PO,PO1,PO2,PO3 எதுவாக இருந்தாலும் இந்த 13 பக்கங்களில் 126 கேள்வி பதில்கள் உங்கள் கையில் இருந்தால் தேர்தல் பணி மிகவும் எளிமை
தபால் வாக்கு செலுத்தியப்பின் படிவம் 13-D ஐ வாக்காளர் எடுத்து செல்லலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog