மாநிலத்தில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருவோரை நிரந்தரமாக்க வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.மாநிலத்தில் இயங்கிவரும் 412 அரசு முதல்நிலை கல்லூரிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகிறார்கள்.
தனியார் பள்ளி மாணவர்களுக்கும் சைக்கிள், மடிக்கணினி – அரசுக்கு கோரிக்கை!!
அரசின் சார்பில் மாதந்தோறும் வழங்கப்படும் குறைந்த கவுரவ தொகையை பெற்று கொண்டு பணியாற்றி வரும் அவர்களுக்கு எந்தவிதமான சமூக பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. இதனிடையில் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 2003ம் ஆண்டு முதல் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இது தொடர்பாக பேரவை, மேலவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதல்வர் என அனைவரின் வீட்டு கதவுகளை தட்டியும் இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. இதனிடையில் கவுரவ விரிவுரையாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யகோரி போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஒவ்வொரு கல்வியாண்டிலும் புதியதாக நிரந்தர விரிவுரையாளர் நியமனம் செய்யப்பட்டு வரும்போதும் போராட்டம் நடத்துகிறார்கள். இதனிடையில் புதிய விரிவுரையாளர் நியமனம் நடக்கும் சமயத்தில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வருவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக்க சட்டத்தில் இடமில்லை என்ற வாதம் மாநில அரசின் சார்பில் பலமாக வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் பெண் கல்வி உதவித்தொகை வழங்கல் – ஆதிதிராவிட நலத்துறை அறிவிப்பு!!
இதனிடையில் கடந்தாண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்காமல் இருந்ததால், விரிவுரையாளர்களுக்கு கவுரவ தொகை வழங்காமல் தவிர்க்கப்பட்டது. ஏற்கனவே நிலுவையில் உள்ள கவுரவ தொகையுடன் கொரோனா காலத்தில் நிறுத்தி வைத்துள்ள ஊதியம் வழங்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தங்களை நிரந்தரமாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.